இனி போலீஸ் சரிப்பட்டு வராது, துணை ராணுவம் தான் ! - StudentsDa

இனி போலீஸ் சரிப்பட்டு வராது, துணை ராணுவம் தான் !


144 தடை உத்தரவு தொடங்கி 5-வது  நாளே ஆகிய இன்றே, விதிகளை மீறி மக்கள் கூட்டம் அங்கும் இங்கும் இறைச்சி வாங்கவும், மீன் வாங்கவும் அலை மோதி கொண்டு கடைகளுக்கு சென்று வருகின்றனர்.

5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் இருக்க கூடாது  ! ஒரு வருக்கு ஒருவர் 1 மீட்டர் இடைவெளி விட்டு இருக்க வேண்டும் என்று அரசு கூறியதை ஒரு துளி கூட எண்ணி பார்க்காமல் மக்கள் அலட்சியம் காட்டிவருகின்றனர்.

இதே நிலைமை நீடித்தால் ! இத்தாலி , அமெரிக்கா என்று  அதிக பாதிப்புகளை பெற்ற நாடுகளின் வருசையில் இந்தியாவும்  இடம் பெற்று விடும்.

இந்த நிலைமையை தடுக்க, அரசு போலீசாருக்கு பதிலாக  துணை ராணுவத்தை வரவழைத்துள்ளது.

அவர்கள் கூறுவது நமக்கு புரியாது ! நாம் கூறுவது அவர்களுக்கு புரியாது ! எனவே, தேவை இல்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு செம அடி விழும்   என்பதை இந்த பதிவின் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் ...

அரசு இவ்வாறு செய்வது மக்களின் நலன் கருதி மட்டுமே ! மக்களை காய படுத்துவதும்,  அவர்களை வீட்டிற்குள் அடைத்து கொடுமை செய்வதும் அரசின் நோக்கம் அல்ல.

இந்த வைரஸினை பெரிய வல்லரசு நாடுகளினாலே தாங்க முடியாத இந்த நிலமையில் இந்த வைரஸ் இந்தியாவில் கை மீறி சென்றால் மத்த நாடுகளை விட பெரிய அளவில் பேரழிவை நாம் சந்திக்க நேரிடும்.

 
Previous article
Next article

Leave Comments

கருத்துரையிடுக

தங்களின் கருத்துக்களை இங்கு பதிவிடவும்...

Articles Ads

Articles Ads 1

Articles Ads 2

Advertisement Ads