10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா ? 11 மற்றும் 12-ஆம் வகுப்பு ? - StudentsDa

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா ? 11 மற்றும் 12-ஆம் வகுப்பு ?


மார்ச் 19-ல் தொடங்கி ஏப்ரல் 9-ல் முடிவடைய இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, கொரோனா போன்ற சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், பொது தேர்வு கிடையாதா ? என மாணவர்களும் பெற்றோர்களும் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதற்கு அரசு, "எந்த ஒரு சூழலிலும் பொதுத்தேர்வு நடைபெறாது" என்று கூற ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்றும் மாநில அளவில் நடை பெற வேண்டிய தேர்வினை, மாவட்ட அளவில் நடத்த முடிவெடுக்க போவதாகவும் கூறியுள்ளனர்.

மார்ச் 4-ல் தொடங்கி  மார்ச் 26-ல் முடிவடைய இருந்த 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கடைசி தேர்வு மட்டும் நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடைசி தேர்வானது கட்டாயமாக நடைபெறும் ! என்றும் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அதனை 12-ஆம் வகுப்பு பொது தேர்வின் பொழுது சேர்த்து எழுதுவார்கள் எனவும் அரசு அறிவித்துள்ளது.

மேலும் 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 12-ஆம் வகுப்பிற்கு  செல்வதில் எந்தவித சிக்கலையும் ஏற்படுத்தாது.

31.03.2020-ல் நடைபெரும் என அறிவித்த 12-ஆம் வகுப்பு பொது தேர்வு திருத்தும் பணி, ஊரடங்கு உத்தரவால் இன்றும் நடைபெறவில்லை.

எனவே 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்பொழுது அறிவிக்கப்படும் என தேர்வு தாள் திருத்தும் பணி தொடங்கிய பின்பு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

மேலும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வில் 8 லட்ச மாணவர்கள் எழுதவிருந்த தேர்வுவில் கொரோனா அச்சத்தால் கடைசி தேர்வில் மட்டும் 35,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.

அவர்களுக்கான மறு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்பபடும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
Previous article
Next article

Leave Comments

கருத்துரையிடுக

தங்களின் கருத்துக்களை இங்கு பதிவிடவும்...

Articles Ads

Articles Ads 1

Articles Ads 2

Advertisement Ads