இந்தியாவை காப்பாற்றிய தடுப்பூசி ! - StudentsDa

இந்தியாவை காப்பாற்றிய தடுப்பூசி !


இந்தியாவில் கொரோனாவின் தாக்கம்  3000-த்தை தண்டி சென்று கொண்டிருந்தாலும், உலக நாடுகளை உற்று நோக்குகையில் சற்று குறைவு தான்.

இதற்கு காரணம் இந்தியாவில் BCG தடுப்பு ஊசி போடும் பழக்கம் தான் ! என்று ஒரு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

BCG என்பது காச நோய்க்காக இந்தியாவில் அனைவருக்கும் போட படும் ஒரு தடுப்பு மருந்து ஆகும்.

இந்த மருந்தானது காச நோய்க்கு மட்டுமின்றி, மற்ற சுவாச நோய்களுக்கும் போட கூடியது. எனவே கொரோனா ஒரு சுவாச நோய் என்பதால், இம்மருந்து கொரோனாவை எதிர்த்தும் போராட கூடிய தன்மையினை பெற்றுள்ளது.

கொரோனா தொற்றில் அதிகளவு பாதிக்கப்பட்ட அமெரிக்கா மற்றும் இத்தாலியில் இம்மருந்து போடும் பழக்கம் கிடையாது  !  எனவே தான் அங்கு தொற்றின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது.

இந்த மருந்தினை காச நோய்க்காக தலைமுறை தலைமுறையாக இந்தியாவில் பயன் படுத்துவதால், கொரோனாவின் தாக்கம் மற்ற நாடுகளை விட குறைவாகவே இருக்கும் என்று கூறி உள்ளனர்.

இந்த செய்தியானது இந்திய மக்களிடையே ஒரு நிம்மதியை தந்திருப்பினும் அலட்சியம் காட்டினாள் பாதிப்பு கட்டாயம் ஏற்படும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.   
Previous article
Next article

Leave Comments

கருத்துரையிடுக

தங்களின் கருத்துக்களை இங்கு பதிவிடவும்...

Articles Ads

Articles Ads 1

Articles Ads 2

Advertisement Ads