மில்லியனை கடந்தது COVID-19 ! - StudentsDa

மில்லியனை கடந்தது COVID-19 !


உலக அளவில் கொரோனா வைரஸ் ஆனது  காட்டு தீ போல பரவி, பல உயிர்களை பறித்து கொண்டு வருகிறது. இந்தவாரம் கொரோனா வைரஸ் தொற்றின்  எண்ணிக்கையானது 10 லட்சத்தை எட்டியுள்ளது.

இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இதில் பலிகளின் எண்ணிக்கை 58,937+ ஆகும்.

அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இத்தாலியும் உள்ளது.

அந்நாட்டு மக்கள், பலிகளின் எண்ணிக்கையை கண்டு முகுந்த அச்சத்தில் உள்ளனர். அமெரிக்கா அதிபர் "இதை விட பெரிய இடர்களை சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.

இத்தாலியில் போதுமான பணி ஆட்கள் இல்லாததால் மருத்துவ பணிகளை மேற்கொள்வதில் மிகவும் அவதிப்படுகின்றனர். அங்கு இறந்தவர்களின்  உடல்களை கூட புதைக்க இடமில்லாமல் , எரித்து கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்வதால் அதிக அளவில் லாபத்தை ஈட்டி கொண்டு வருகிறது சீனா.

இந்நிலை தொடர்ந்தால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சரிந்து விடும் என்று பலரும் அஞ்சுகின்றனர்.
Previous article
Next article

Leave Comments

கருத்துரையிடுக

தங்களின் கருத்துக்களை இங்கு பதிவிடவும்...

Articles Ads

Articles Ads 1

Articles Ads 2

Advertisement Ads