இதற்கு 1 கோடி ரூபாய் பரிசு என இந்திய அரசு அறிவிப்பு ! - StudentsDa

இதற்கு 1 கோடி ரூபாய் பரிசு என இந்திய அரசு அறிவிப்பு !


தற்போது அதிக அளவில் பயன்படுத்தும் zoom app-ல்  சில பிரச்சனைகளை கொண்டுள்ளதால், அதனை சரி செய்யும் வரை zoom  app-னை  பயன்படுத்த வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.

இந்த App-ஆனது மாணவர்களாலும் , அலுவலக பணியாளர்களாலும்  அதிக அளவில் conference video செய்வதற்காக பயன்படுத்தப்பட்டது.

இந்த ஊரடங்கு காலங்களில்  அதிகளவு பயன்படுத்தப்பட்ட App-களின் வரிசையில் zoom app-ம் இடம் பிடித்துள்ளது.

இதற்கு காரணம் ஒரே நேரத்தில் அதிக நபர்களுடன் வீடியோ கால் செய்யும் சிறப்பு அம்சம்  இந்த zoom app-ல் மட்டுமே காணப்பட்டது.

இந்த சிறிய நிறுவனத்தின் வளர்ச்சியை கண்ட Whatsapp , Skype போன்ற நிறுவனங்கள் தங்கள் செயலியிலும் இந்த தொழில் நுட்பத்தை கொண்டு வர  முயற்சியில் இறங்கி உள்ளனர்.

தற்போது whatsapp-ல் 8 நபர்கள் வரை conference call செய்யும் நுட்பத்தை கொண்டுவந்துள்ளனர். இந்த Update ஆனது Beta test-ல் உள்ள நபர்களுக்கு கிடைத்துவிடும் என Whatsapp நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கு தீர்வு காணும் விதமாக இந்திய அரசும்  Zoom செயலியினை விட சிறந்த மற்றும் பாதுகாப்பான செயலினை உருவாக்கி தரும் நபருக்கு, தலா 1 கோடி ரூபாய் பரிசாக வழங்கபடும் என அதிகார பூர்வமாக  அறிவித்துள்ளது.  
Previous article
Next article

2 Comments to

தங்களின் கருத்துக்களை இங்கு பதிவிடவும்...

Articles Ads

Articles Ads 1

Articles Ads 2

Advertisement Ads