பல பிரச்சனைகளை தாண்டி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேவைதானா ? - StudentsDa

பல பிரச்சனைகளை தாண்டி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேவைதானா ?


தமிழ்நாடு அரசானது தடைபட்டு போன பத்தாம் வகுப்பு பொது தேர்வை ஜூன் மாதம் நடத்த  வேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ளனர்.

தற்போதைய நிலமையை எண்ணி பார்க்காமல் எடுத்த இந்த முடிவை கண்டு பல சமூக ஆர்வலர்கள் தங்களின் எதிர்ப்புகளை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் 9 லட்சம் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் உள்ளனர். இவ்வளவு மாணவர்களை கொண்டு ஒரு பொது தேர்வை, இந்த நிலமையில் நடத்துவது என்பது வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விடுவது போன்றது.

ஏனென்றால், இந்த தவறை நாம் கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்கனவே செய்துவிட்டோம். அதனால் தான் தமிழ்நாட்டின் தொற்று எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டி மாநில அளவில் மூன்றாவது இடத்திலும், இந்தியா உலக அளவில் பதினோராவது இடத்தையும் பிடித்துள்ளது.

ஜெர்மனியும் இந்த நிலையில் பொது தேர்வை நடத்தி உள்ளார்கள், ஆனால் தோற்று எண்ணிக்கை பல நாட்கள் குறைய தொடங்கிய பின்னரே  இந்த பொது தேர்வினை நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் நாடானது 12-ஆம் வகுப்பு பொது தேர்வையும் 10-ஆம் வகுப்பு பொது தேர்வையும் தள்ளிவைக்காமல் மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்து விட்டார்கள் என்பது குறிப்பிட தக்க ஒன்று.

பல பிரச்சனைகளை தாண்டி தொற்று பரவாமல் எவ்வாறு பொது தேர்வு நடந்து முடிய போகிறது என்று காலம் தான் பதில் சொல்லும். கோயம்பேடு மார்க்கெட் போல இதுவும் ஆகிவிட்டால், நமக்கு இந்த பொது தேர்வு மிக பெரிய அடியாக இருக்கும்.
Previous article
Next article

Leave Comments

கருத்துரையிடுக

தங்களின் கருத்துக்களை இங்கு பதிவிடவும்...

Articles Ads

Articles Ads 1

Articles Ads 2

Advertisement Ads